Wednesday 8 May 2013

கவிதை

கனத்தது கவிதை
கடதசிக்கு
சுவைத்தது கழுதை...!

ஏதிலி


வான்மழையை ஏந்தாது
எம்கூரை வாங்கும்
இம்மழலைகளை தாங்காது
பசிகூட ஏங்கும்..!
மழைகண்டு வீடுகசிய
மழலை பசிகொண்டு விழிகசியும்
எழ்மைகொண்ட ஏதிலி
எதைக்கொண்டு பசிகழிக்கும்..?
ஒன்றேகுலம் ஒன்றேதேவன்
என்றோரெல்லாம்
ஒரேதேசம் ஒரேநாடுயென
ம(று)றக்காமல் சொல்லிப்போயினர்...!

Wednesday 1 May 2013

மேதினம்



பாவுக்கு கருவாகவும்
பாருக்கு எருவாகவும்
பயன்பட்டுக்கொண்டோம்

அரசே மேதின ஊர்வலத்தில்..!
யாரிடத்தில் கேட்கிறது
என்னுரிமையை..?
நான் கேட்கவேயில்லை...!

Monday 29 April 2013

யாசித்து



வீசியதே விதையாகையில்
விதைத்தது விருட்சமாகாதா.?
துவேசித்து அடிக்கையில்
துடைத்திட துணி-வராதா..?

நேசித்த மக்களும்
பூசித்த மண்ணும் பறிபோகையில்
யாசித்து பொதுமெனெ
போசித்து வாழ்ந்திடலாமா..?

Sunday 28 April 2013

வேடதாரி

கோடாரிக்கு காம்பிலும் சந்தேகம்
வேடதாரிதானே-யது
வேர்கொண்டு மரமாகிட்டால்
அக்கினி தின்றுசோதித்தது தேகந்தனை...!

Tuesday 8 January 2013

எப்படிமறக்க...?

தண்ணீருக்கு கப்பலுண்டு
கண்ணீரைத்தான் எப்படிக்கடக்க
என்னெஞ்சில் நிறைஞ்சிருக்கிற
உனைநானும் எப்படிமறக்க...?

கடல்கள் நிரம்பிவழியாது
காதல்கள் குறைந்தால் வாழ்வேது
இரட்டைக்கிழவி பிரிந்தால் வாழாது
நீயின்றி நானேது ?

துயிலும் விழியும்
மயிலே உனக்காகத்தானே
நுனிப்புல்லாய் படர்கிறேன்
பனித்துளிநீ வா மானே...!!!