Sunday 19 August 2012

பேச்சின்றி.

மடிந்திருந்தால் நேற்றோடு
முடிந்திருக்கும்
காற்றோடு கலந்திருந்தால்.

கற்றையோடு
ஒற்றையாக-உன்
நெற்றிப்பரப்பில்-என்
வெற்றுப்பார்வை...!!!

கைப்பிடிக்கும் தூரம்தான்
ஆனால்...
வெற்றுப்பைகள் நெஞ்யையழுத்த
காற்றுப்பைகள் வேகமாய்...

நமதெல்லாம்-இனி
தனித்தனியாக
நான்மட்டும் தன்னந்தனியாக...

தொலைந்துபோகிறேன்
பேச்சின்றி
தொலைபேசியுமின்றி ...

Tuesday 14 August 2012

குற்றம்.

எழுத்தில் கொள்ளாது
நாம்பட்ட வலிகள் இருந்தும்
எழுதையில் கனத்திடும்
படிக்கையில் துடித்திடும்
மறுநாளே அனைத்தையும் மறந்திடும்
பாழாய்ப்போன மனது...!

குண்டில் தப்பி குண்டர்கையில்...!
பால்மணம் மாறா பச்சிளம் சிட்டுகள்
பாழாக்கியவன் மீண்டு(ம்)வர
வாதாடி திறமைகாட்டும்
கறுப்பாடை காவலர்கள்...!

படித்தவன் பக்கம்நிக்க-கயவன்
பக்கம்சார்ந்து சட்டம்செல்ல
பயமின்றி குற்றம்
தண்டம் கட்டினால் போதும்...

பெற்றவள்-பிஞ்சை
பற்றிகொடுத்து கதறுகையில்
வல்லூறை காப்பாற்ற
வல்லவர்கள் சேர்கிறார்கள்.

தண்டனை வேண்டும்
தண்டிக்க மட்டுமல்ல
குற்றங்களை குறைத்திடவும்...

Tuesday 7 August 2012

மனிதம்.


எட்டணா போதுமென்றால்
ஏடெதுக்கு
எட்டியே போய்விடு
உறவெதுக்கு...?

கணினியுகத்தில்-உன்

கண்ணியம் குறைந்திட்டால்
உணர்வுகள் இறந்திட்டால்
பொறிகள்
உன்னிடம் பெற்றிடாதா?

அசேதனம்

சேதனத்தை நிரவிடும்போது
இயற்கைதன்
சமநிலை இழந்திடாதா?

மரங்கள் அருகிட

உயிர்கள் கருகிடாதா? 
உந்தன் சந்ததி
உன்னோடு சரிந்திடாதா?

பசிகொல்லும் உலகில்

காமம் முறைதாண்டும்போது
நீதிதான் தூங்கிட்டால்
மனிதம் காடேகிடாதா?

இயற்கையின் இளவல் நீதான்

மறந்திடாதே
மனிதம் உன்னியல்பேதான்
தொலைத்திடாதே
உயர்வே உழைப்பிற்தான்
சோர்ந்திடாதே...!!!

Sunday 5 August 2012

தமிழ்ச்சொற்கள் 2......

நாங்கள் தூயதமிழில் பேசாத போதும்,எழுதுவதற்கு விரும்புகின்றோம்,அப்படி விரும்பித்தேடிய சொற்களின் தொகுப்பை முன்னைய பதிவில் இட்டிருந்தேன்,இது அதன் தொடர்ச்சி....

Soft Drink -மென்பானம்
Cool Drink-குளிர்பானம்
Ice Cream-குளிர்களி
Fruit Juice-பழச்சாறு
Jam-பழப்பாகு
Biscuit-ஈரட்டி
Oxygen -உயிர்வாயு
Salon-சிகை அழககம்
Fancy House-அழகு மாடம்
Battery-மின்கலம்
Rewinding-மீளமுறுக்குதல்
Keyboard-விசைப்பலகை
Mouse-சுட்டி
Monitor-கணினித்திரை
Control Processing Unit-மையச்செயலலகு
Uninterruptible Power Supply-தடையில்லா மின்வழங்கி
Floppy Disk-நெகிழ் வட்டு
Fiber Optics-ஒளியியல் நார்
Charger-மின்னேற்றி
Brush-தூரிகை
Fine Arts-நுண்கலை
Microphone-நுணுக்குபபன்னி
Fan-விசிறி
Network-வலையமைப்பு
Typesetting-தட்டச்சு
Photo Copy-நிழற்ப்படப்பிரதி
Printers-அச்சகம்
Publications-வெளியீட்டகம்
Pen-எழுதுகோல்
Pencil-கரிக்கோல்
Book-பொத்தகம்
Grocery-பல்பொருள் வாணிபம்
Meat-புலால்
Service Station-சுத்திகரிப்பு நிலையம்
Nurse-மருத்துவ மாது
Invoice-விற்பனைச்சிட்டை
Calender-நாட்காட்டி
Minute-மணித்துளி
Second-நொடி
Daily Paper-தினசரி/நாளேடு
Police-காவல் துறை

நட்பு


தொப்புள்கொடி உறவல்ல
வெட்டியறுத்துவிட
தாலிகட்டும் சொந்தமல்ல
இரத்துப்பத்திரம்
தேவையேயில்ல...

ராக்கிகட்ட
வேண்டியதில்ல
இதுதான் உறவென்றுகூற...

உடுக்கை
இழந்தபோதும்
இடுப்பை
உடைக்கும்போதும்
யாக்கைத்தரித்த
உயிர்-எனக்கு
நம்நட்பு-அது
யாப்பில்லா உறவு.

Wednesday 1 August 2012

தமிழ்ச்சொற்கள் 1...

நாங்கள் பேசுவதற்கு பயன்படுத்தும் பெரும்பாலான வார்த்தைகள் தமிழ் இல்லை அப்படியே தமிழாக இருந்தாலும் அவை வட்டார வழக்கு சொற்களாக இருக்கும்,ஆனாலும் எழுதுவதற்கு தூயதமிழை பயன்படுத்துற/பயன்படுத்த ஆசைப்படுகிற  நிறையப்பேர் சமூக வலைத்தளங்களில இருக்கின்றோம்.அப்பிடி எழுதவேண்டியநேரங்களில தமிழ் வார்த்தைகளை  தேடித்தான் படிக்கவேண்டியிருக்கு,அப்பிடி நான் தேடிப்பெற்ற சொற்கள் இவை,பிழைகள் இருப்பின் கூறவும்.....

Technology-தொழிநுட்பம்
Computer-கணினி
Laptop-மடிக்கணினி
Calculator-கணிப்பான்
Data-தரவு
Password-கடவுச்சொல்
Information-தகவல்
Software-மென்பொருள்
Hardware-வன்பொருள்
Operating System-இயங்குதளம்
Hard Disk-வன்தட்டு
Memory-நினைவகம்
DVD(Digital video Disk)-இறுவட்டு
Photo-புகைப்படம்/நிழற்ப்படம்
Video-ஒளிப்படம்/காணொளி
CD(compact disk)-குறுவட்டு
Telephone-தொலைபேசி
Fax-தொலைநகல்
Mobile/Cell phone-செல்லிடபேசி
Smart phone-நுண்ணறி பேசி
Internet Browser-இணையத்தள உலாவி
Website-வலைத்தளம்
System-முறைமை
Cricket-துடுப்பாட்டம்
Wicket-இலக்கு
Over-பந்துப்பரிமாற்றம்
Bowling-பந்துவீச்சு
No Ball-முறையற்ற பந்து
Wide Ball-அகலப்பந்து
Office-பணிமனை
Cake-குதப்பி,அனிச்சல்

பாண்/Bread-வெதுப்பி
பணிஸ்/Bun-மென்வெதுப்பி,இனிவெதுப்பி
Bakery-வெதுப்பகம்
Cycle-மிதிவண்டி
Ambulance-நோயாளர் காவி
Car-மகிழுந்து
Bus-பேருந்து
Van/Minibus-சிற்றூர்தி
Train-தொடருந்து
Motorcycle-உந்துருளி
Auto/Three wheeler-முச்சக்கர வண்டி
Flight-வானூர்தி
Helicopter-உலங்குவானூர்தி
Court-நீதிமன்றம்
High Court-மேல்நீதிமன்றம்
Supreme Court-உச்சநீதிமன்றம்/உயர் நீதிமன்றம்
Session Court-அமர்வுநீதிமன்றம்
Magistrate Court-நீதவான் நீதிமன்றம்
Lawyer-சட்டவாளர்
Supermarket-நவீனசந்தை/சிறப்பு அங்காடி
International Airport-அனைத்துலக வானூர்தி நிலையம்