Tuesday 14 December 2010

மொக்கை.....:P

பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்
நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.......:(

இப்ப பாருங்க ,
மலை மீது இருக்க முடியும்…
குண்டூசி மீது இருக்க முடியுமா............?????

no no அழக்கூடாது…Control yourself

இந்த மொக்கையெல்லாம் நமக்கு புதுசா...........?

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி....

அமெரிக்காகாரன்:நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்
அவுஸ்ரேலியாகாரன்:நாங்கதான் முதல்ல புளுட்டோ க்கு போனோம்
நம்மட ஆளு:நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.

அமெரிக்காகாரன்:ஒருத்தனிட்ட சிக்கினாலே குஸ்டம்....சாரி கஷ்டம்.....இங்க ரெண்டுபேர்வேற நிக்கிறாங்க....நம்மள என்ன பண்ணப்போறாங்களோ???
அவுஸ்ரேலியாகாரன்:டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன்ல காலவெச்சா எரிஞ்சு போயிடுவோம்...
நம்மட ஆளு- கொய்யாலே அது எங்களுக்கும் தெரியும்,நீ மூடு..நாங்க போனது ராத்திரியில...
அவுஸ்ரேலியாகாரன்:பயபுள்ள நம்மளவிட பெரிய டுபாக்கூர் போல .......:(
நம்மாளு:நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி.....இப்ப சொல்லையா வேணும்..?
அமெரிக்காக்காரன்:?????@$@??

சொல்லவே இல்ல

  • In Class Assignment- சொல்லவே இல்ல...
  • Take Home Assignment- முடியல...
  • Presentation:குட்டை level ல இறங்கினாலே குதறுவானுகள்....கடல் level ல இறங்கியிருக்கம் கதற கதற அடிப்பானுகளே...
  • Exam - உக்காந்து யோசிப்பன்களோ?
  • Arrears - Risk எடுக்குறதெல்லாம் எனக்கு rusk சாப்டுற மாதிரி..
  • Mid result - இப்பவே கண்ணை கட்டுதே..
  • Degree:அது இந்த தூத்துக்குடி பக்கம் விழுப்புரம் பக்கம் இருக்கு எண்டு சொல்லுவன்...

eppoodi...?

Customer: Hi, our printer is not working.

Customer Service: What is wrong with it?

Customer: Mouse is jammed.

Customer Service: Mouse? And how it is related to printer?

Customer: Mmmm.. Wait, I will send a picture.

>>>>>>
>>>>>
>>>>>>
>>>>>>
>>>>
>>>>>>>>>
>>>>>>>>
>>>>>>
>>>>>>>
>>>>>>
>>>>>>>>
>>>>>>>
>>>>>>>>>>
>>>>>>>>>
>>>>>>
>>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>>>
>>>>>>>
>>>>>>>>
>>>>>>>
>>>>>>>>
>>>>>>>>
>>>>>
>>>>>>>>>>


Friday 12 November 2010

ஒரு பயணம்....

ஒரே பேருந்தின்
பக்கத்து ஆசனங்களில்
நானும் அவளும்..

வழமையாக இயற்கையை
தோழமையுடன் பார்க்கும் மனம்
ஏனோ இன்று அப்படிப்பார்க்கவில்லை

அவள் என்னைப்பார்க்கிறாளா
என்பதைப்பார்ப்பதிலேயே
என்பயணத்தின் பாதி கடக்கிறது....

மனதை போலவே என் கண்களும்
எதையோ தேடுகின்றன ....
அவள் எண்ணிப்பார்க்காத நேரம் பார்த்து
அவளைப்பார்க்கின்றேன்...

அவள் என்னை பார்க்கின்றாள்....
அப்போதுதான் தெரிகின்றது
இவ்வளவு நேரமாய் அவளை
நான் பார்ப்பதை அவள் பார்த்திருக்கிறாள்...

கண்களை திருப்பி
கண்ணாடிவழியே வெளிகளை பார்க்கின்றேன்..
கடைக்கண் பார்வை நான் பார்க்க
என்னை பிரதிபலிக்கின்றாள் அவளும்...

வெளிகளின் வழிவரும் சுழல் கூட
அவள் குழல் தழுவியே வருகின்றது....
இவளை பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை

இந்த குழப்பம் என்னது.....
எந்த சலனமும் இல்லாமல்
அவள் கண்கள் என்னையும் தாண்டி
எம்மைத்தாண்டிச்செல்லும் மரங்களில்....

இந்த பயணம் என் ஊர் போகுமட்டுமா...
இல்லை என் உயிர் போக்கு மட்டுமா.....
விடைதெரியா கேள்விகள் .....

Monday 18 October 2010

வெண்மதியாள்


இருட்டினில் உன் முகம் பார்க்க ஆசை
இருந்தும் முடிவதில்லை நிலவாய்
தெரிவதால் உன் வதனம்....


நானும் நிலவாக வளர்கின்றேன்
உன்னைக்காணும்
பௌர்ணமி தினங்களில்.

காதல் கவிதை

கவிதைகள் தேவையில்லை
நம் காதலுக்கு
நீ போதுமே..

காவியங்கள் வேண்டியதில்லை
எனக்கு
நம் காதல் காவியமே...

இங்காவது முடியுமா
காவியம்
காதலர்கள் சேர்வதாய்...?

காவியங்கள் வாழ
காதலர்களை சாகடிக்கிறார்கள்
காதல் வாழ்வதாய் கூறிக்கொண்டு..

Friday 17 September 2010

ஒரு இனம்

தெருவோரமாய் நிற்கும் வானளாவிய மரங்கள்
தெருப்புளுதியை தம்மிலைகளில் வாங்கிய செடிகள்..
கடந்துசெல்ல மனம்வராத இயற்கையின் கொடையாய்
பரந்துசெல்லும் பச்சைப்பசும் நெல்வெளிகள்....

கலை விடிந்ததை சேவலுக்கே சொல்லும் மனிதங்கள்
மாசிக்குளிரிலும் உழவடித்து முடித்த பின்புதானே
காலைப்பகலவனை வரவேற்கும் இந்த உழவரினம்..
சூரியன் வந்தது விட்டதை மீண்டும் சொல்லும்
பள்ளிசெல்லும் சிறுவண்டுகள்....

எதோ வைத்ததை எடுக்கச்செல்வது போல்
ஆகாயத்தில் சந்தை நாடாத்திச்செல்லும்
பறவைக்கூட்டங்கள் நடுவே ஒளிக்கீற்றாய்
கதிரவன் எறியும் ஒளிக்கதிர்கள்...

மார்கழி மழையையும், பங்குனி வெயிலையும்
பயிரோடு உயிராக உடலோடு தான் வாங்கி
தயிரோடு பச்சைமிளகாய் பழைய சாதத்தோடு
உரித்த வெங்காயம் சாப்பிட்டு,பாரே பந்தி போட
காளையில் நுகம் வைத்து ஏர்பிடிக்குமினம்.

இதெல்லாம் நேற்றோடு முற்றுப்பெற்ற
காற்றோடு கலந்துபோன ,
வீரத்தோடு தோற்றுப்போன,
வரலாறுகளை புரட்டிப்போட்ட,
புதிதாய் நாநூறுகள் எழுதவைத்த
வன்னியின் பழைய நிலைகள்.....

உயிரிழப்பு என்பது எதோ முடி வெட்டுவதைப்போல
இழவு வீடுகளாய் எமது அயல் வீடுகள்...
இழவு விழ யாருமின்றி எமது வீடுகள்...
மும்மாரி பொழிந்த நம்மிடங்கள் இப்போதெல்லாம் எந்நேரமும் செல்மாரி பொழிகின்றன...

புதிதாய் யாரும் ஊருக்குள் வந்தால்
கெதியாய் கத்திக்காட்டும் அட்காட்டிகூட
பறந்து திரியும் கிபீர் வந்ததை சொல்வதில்லை..
அதுக்கும் பழகிவிட்டதோ?இல்லை பயமா இருக்கோ?

உண்ண உணவின்றி ,படுக்க பங்கரின்ரி ,போக தரையின்றி
போனபோது எஞ்சிய உயிர்வாழும் நடைபிணங்கள்...
உயிரிழந்துபோன சொந்தங்களை அப்பிடியே போட்டிட்டு
கைகாலிழந்து குற்றுயிராயிருந்த நேசங்களை மட்டும்
தூக்கிக்கொண்டு வவுனியா வந்து சேருகிறது..

உழவு செய்து உலகை வாழவைத்த ஒரு இனம்..
ஒருவேளை உணவுக்கும் தண்ணீருக்கும் கையேந்துகிறது
நம்மை அழித்த நயவஞ்சகரிடமே கை எந்துகிறோம்..
நமக்கு ஒருவேளை உணவு தருமாறு....

நினைச்சது தப்பு

நீ என்னுடன் பழகிய தருணங்களை விட
"நீ நினைச்சது தப்பு" என்று என்னைப்பார்த்து
நானே சொன்ன அந்த உயிர் வலித்த கணமே
நினைக்க முடியாமல் மறக்க மாட்டேனென்கிறது...

உன் உதடுகள் சொல்வது உண்மைதானா...
உன் மனமென்னை தள்ளுகிறதா-இல்லை
என் நினைவுகளை கொல்வது உன் சுயம்தானா..

நீ என்னை மாற்றானாய் நினைத்தாலும்
உன்னை மாற்றான் துணையாய் பார்க்க வலிக்குதடி
தோற்றது நான் மட்டுமல்ல...
நம்மை சேர்க்க எண்ணிய காதலும்தான்.

வெண்மதியே...

நான் செல்லும் இடமெல்லாம்
என் நிழலாக வரும் வரும் வெண்மதியே
உன்னைத்தானே உவமானமாய்க் கொண்டேன்
என்னவளை உவமேயமாக்கும் போது...

உன்னைப்போல் அவளும்
என்வாழ்க்கையை விட்டு மறைவாளென்று
அப்போது புரியமல்த்தான் உன்னைக்கொண்டு
அவள் அழகைச் சொன்னேன்...

இப்போதெல்லாம் உன்னைக்கொண்டு
அவள் நினைவுகளை மட்டும்தானே
உவமைப்படுத்த முடிகிறது...
அவைகள் மட்டும் பௌர்ணமி நிலவாக
என் வாழ்க்கையில் ஒளிர்கின்றன....

மனதோடு......

பார்த்தபோதே பனித்துவிட்ட....
பங்குனி பனித்துளியவள்.
பார்க்காமலே பார்க்கவைத்தாள்.
பார்த்தபோது ரசிக்கவைத்தாள்.

அழுதுகொண்டே சிரிக்கவைத்தாள்.
சிரித்துக்கொண்டும் தூங்கவைத்தாள்.
பகலில் நிழலாகவந்தாள்.
இரவிலும் கனவாகவந்தாள்.

விண்ணோடு முகிலாக ..
முகிலுக்குள் மழையாக..
கண்ணோடு துளியாக...
என்னோடு அவள்......
மனதோடு காதல்..
.என் மனதோடு காதல்...

காதல்






இதயம்கொத்தி பாம்பாக-என்
இதயம் தீண்டிச்சென்றாளே.
காதல் எனும் விசத்தை....
கண்ணாலே வீசிச்சென்றாளே.

இதமான மௌனபுன்னகையால்.
இரண்டாக இதயம் பிளந்தாளே.
ஒருபாதி எனக்காக-தன்
மீதியோடு விட்டுச்சென்றாளே.
என்னோடு பிறந்த இதயம்...
அவளுக்காக துடிக்கின்றதே.
எனக்காக பார்த்த கண்கள் ....
அவளை மட்டுமே பார்க்கின்றதே.......




வலி கொல்லுதடி ......

ஒரு பாதி உன் கனவாக என் இரவுகள் விடியுதடி.
மறு பாதி உன் நினைவாக என் நாட்கள் கழியுதடி.
உன்னிடம் தந்தது என்னிதயத்தின் அசலடி..
எனக்குள்ளும் அதன் நிழல் உள்ளதடி.
அதனுள்ளும் உணர்வுகள் உள்ளதடி.

நீ வராதவரை என் பாதை நெடுந்தூர சாலையடி.
என் சாலையோர நிழலாக உன்னைப் பார்த்தேனடி.
நீ என்னில் செல்லும் பேருந்தாய் வந்தாயடி.

உன் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகள்.
என் வாழ்க்கையை உதிர்க்க வைக்குதடி.
உன்னாலே இறக்கும் என் இதயத்தினுள் .
உனக்கான கோயில் உள்ளதடி.

பூவைத்தேடி வண்டு செல்வது வழமையடி.
முட்கள் வண்டை தடுப்பது இயற்கையடி.
மலரே தேனை விசமாய் தருவது கொடுமையடி

இந்த காதலேன்பதே விந்தையடி...
காரணமே இல்லாமல் வந்து கொள்ளுதடி...
தோரணமே இல்லாமல் இதயம் கொல்லுதடி.....

இதயம்












உதிரம் நிறைந்த என்னிதயம்
உன் நினைவை நிரப்பிக் கொள்கிறதே....
உறக்கமற்ற இரவுகள் போய்.....
உன் கனவுகள் அங்கும் வருகிறதே.....

நாள வழி புனலைக்கூட சுத்தம் செய்யும் என்னிதயம்....
நாணம் வழியும் உன்னைக்கண்டு தன்னிலை மறந்து போகிறதே....
என்னோடு இறந்துபோக நான் மாட்டேன் என்கிறதே.....
உனக்காக துடிப்பதாக அதன் ஒலிகள் சொல்கிறதே......

தமிழன்னை....

உயிர்களின் ஆதாரம் எம் அன்னையே....
அவள் தாய் கூட தரணி போற்றும் தமிழன்னையே........
கல் தோன்றி மண் தோன்ற முன்
அவள் தோன்றினாள் இது பெருமையே....
அவள் வாழ நாம் தருவோம் எம் உயிர் தன்னையே....
அவணியிங்கு அழிந்தாலும் அவள் வாழ்வாள் இது உண்மையே....

மூவேந்தர் அரியணையில் கோலோச்சினாள்..
மூன்றெழுத்தில் பேர் கொண்டு தமிழாகினாள்
முத்தமிழாய் தான்வந்து தேன்பாச்சினாள்....
மூத்த குடியாக வந்தோர்க்கு முன் தோன்றினாள்...

அறமென்றால் தமிழென்று பொருள் கொள்ளுமே... ....
மறமென்றால் எம்மினத்தின் உயிராகுமே....
வரம்பென்று ஒன்றில்லை தமிழன்னைக்கே...
எல்லைகள் எதுவுமில்லை அவள் வாழ்விற்கே...

சுவாசம் பெற்று உயிர் வாழ நாதியில்லை என்று போகினும்....
காற்றிங்கு இல்லாமல் போகக்கூடுமா.....
நாம் போற்றும் தமிழ் கூட அது போலத்தான்...
நாம் இருந்தாலும் இறந்தாலும் தமிழ் வாழணுமே.