Tuesday, 14 August 2012

குற்றம்.

எழுத்தில் கொள்ளாது
நாம்பட்ட வலிகள் இருந்தும்
எழுதையில் கனத்திடும்
படிக்கையில் துடித்திடும்
மறுநாளே அனைத்தையும் மறந்திடும்
பாழாய்ப்போன மனது...!

குண்டில் தப்பி குண்டர்கையில்...!
பால்மணம் மாறா பச்சிளம் சிட்டுகள்
பாழாக்கியவன் மீண்டு(ம்)வர
வாதாடி திறமைகாட்டும்
கறுப்பாடை காவலர்கள்...!

படித்தவன் பக்கம்நிக்க-கயவன்
பக்கம்சார்ந்து சட்டம்செல்ல
பயமின்றி குற்றம்
தண்டம் கட்டினால் போதும்...

பெற்றவள்-பிஞ்சை
பற்றிகொடுத்து கதறுகையில்
வல்லூறை காப்பாற்ற
வல்லவர்கள் சேர்கிறார்கள்.

தண்டனை வேண்டும்
தண்டிக்க மட்டுமல்ல
குற்றங்களை குறைத்திடவும்...

4 comments:

  1. நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...
    வாழ்த்துக்கள்...
    http://varikudhirai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,கண்டிப்பாக வருகின்றேன்...:)

      Delete
  2. பெற்றவள்-பிஞ்சை
    பற்றிகொடுத்து கதறுகையில்
    வல்லூறை காப்பாற்ற
    வல்லவர்கள் சேர்கிறார்கள்.//

    மனம் தொட்ட அருமையான வரிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா,வாழ்த்துக்கள் மெய்ப்படட்டும்...

      Delete