நான்காவது போட்டியும் அதே மைதானத்திலேயே நடைபெற்றது,நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தையும் பின்னர் அதிரடியும் காட்ட 50 ஓவர்கள் முடிவில் 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,இதில் சங்க 97 (130) ,மகேல 40(50) எடுத்திருந்தனர்.பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக தன்வீர்,அஜ்மல்,ஹபீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களினையும் குல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.பதிலுக்காடிய பாகிஸ்தானில் அஸார் அலி 81(126),மிஸ்பா 57(77),சபிக் 25(34),அஜ்மல் 12(14),யூனுஸ் கான் 1(11) ஆகியோரே ஓட்டம்/ஓட்டங்கள் பெற்றவர்கள் மற்றவர்கள் பூச்சியத்துடன் வெளியேறினார்கள்.பந்துவீச்சில் பெரேரா ஹட்ரிக் அடங்கலாக நான்கு விக்கெட்டுக்களினையும்,மலிங்க 2 விக்கெட்டுக்களினையும்,குலசேகர ,மத்தியூஸ்,வீரக்கோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் சரித்தார்கள்.ஆட்டநாயகன் விருதை பெரேரா பெற்றிருந்தார்.
இறுதியும் தீர்க்கமுமான போட்டி இன்று(18 /06 /2012) அதே மைதானத்தில் நடைபெற்றது.இதில்நாணயச்சுழற்ச்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களினை இழந்து 248 ஓடடங்களை குவித்திருந்தது,பரவலாக எல்லோரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தாலும் இருவர் மட்டும் தமது அரைச்சதத்தை பூர்த்தி செய்திருந்தனர்,இம்ரான் farhat 56(63) ,ஆட்டமிழக்காமல் உமர் அக்மல் 55(61) ஆகியோரே அவர்கள்.பந்துவீச்சில் ஜீவன் மென்டிஸ்,குலசேகர தலா இரண்டு விக்கெட்டுக்களினையும்,பெரேரா,மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.பதிலுக்காடிய இலங்கை ஆரம்பத்தில் மெதுவாக ஆடினாலும் இறுதியில் வெற்றியைப்பறித்து தொடரை தனதாக்கியிருக்கிறது.இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட நான்கே பந்துகளில் ஆட்டத்தை வென்று காட்டியிருக்கிறார் அணியின் எதிர்கால தலைவரான மத்தியூஸ் 80 (76).சந்திமால் 54 (74),சங்கா 40(68) ஆகியோர் அவருக்கு துணை நின்றிருக்கிறார்கள்.ஆட்டநாயகன் விருதை மத்தியூஸ் பெற்றிருக்கிறார்.
தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும்,சிறப்பாட்டக்காரராகவும் பெரேரா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.தொடர்முழுவதும் இரண்டு அணிகளும் போராடினாலும் இலங்கையின் கையே மேலோங்கி காணப்பட்டிருந்தது.மூன்றாவது போட்டி கூட இலங்கைக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கையிலேயே கைவிடப்பட்டது.
தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய முதல் மூன்றுபேர்களில் அஸார் அலி ஐந்து இன்னிங்க்ஸ்களில் இரண்டு அரைச்சதம் உள்ளடங்கலாக 217 ஓட்டங்களினையும் சங்கக்கார நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக167 ஓட்டங்களினையும் டில்ஷான் ஒரு சதம் உள்ளடங்கலாக 158 ஓட்டங்களினையும் எடுத்துள்ளனர்.
தொடரின் சிறப்பாக பந்துவீசிய முதல் மூன்றுபேரில் தொடர்நாயகன் பெரேரா நாலு இன்னிங்க்ஸ்களில் ஒரு ஹட்ரிக் ,ஒரு ஐந்துவிக்கெட் பெறுதி உள்ளடங்கலாக 11 விக்கெட்டுக்களையும்,மலிங்க மற்றும் குலசேகர ஐந்து இன்னிங்க்ஸ்களில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இலங்கையின் மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்டத்தினை தாங்கிப்பிடிக்கவேண்டிய நான்கு அல்லது ஐந்து வீரர்கள் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை தந்த ஒரு தொடராக இந்த தொடரை நாம் கருதலாம்......பொறுத்திருந்து பார்ப்போம் டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துவரும் தொடர்களிலும் இலங்கையின் பலத்தை.....:)
No comments:
Post a Comment